Skip to main content

கேரளாவில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் 

 

 

திருவனந்தபுரம்,

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: கேரளாவில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 3 பேருக்கும், வயநாடு மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 2 பேருக்கும், கோட்டயம், கண்ணூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவருக்கும் இன்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் சமீபத்தில் வெளிநாடுகளிலிருந்தும், 2 பேர் சென்னையில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். 4 பேருக்கு கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவி உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்த வந்த லாரி டிரைவர் மூலமாக வயநாட்டில் இன்று 2 பேருக்கு நோய் பரவியுள்ளது. இவர்கள் இருவரும் போலீசார் ஆவர்.  இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து வந்த டிரைவர் மூலம் இதுவரை வயநாடு மாவட்டத்தில் 10 பேருக்கு நோய் பரவி உள்ளது. இன்று கொல்லத்தை சேர்ந்த ஒருவருக்கு நோய் குணமாகி உள்ளது. இதுவரை கேரளாவில் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 534 ஆகும். 490 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 34,447 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 33,953 பேர் வீடுகளிலும்,  494 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 168 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 39, 380 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதித்ததில் 38,509 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் சுகாதாரத்துறையினர், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கம் உள்ள 4,268 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதித்ததில் 4,065 பேருக்கு நோய் இல்லை என்று தெரியவந்துள்ளது. கேரளாவில் தற்போது நோய் தீவிரம் உள்ள 34 பகுதிகள் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

date