கேரளாவில் இன்று 54 பேருக்கு கொரோனா தொற்று, இதுவரை 1,101 பேர் குணமடைந்தனர்
சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
திருவனந்தபுரம்,
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: கேரளாவில் இன்று 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 8 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், தலா 7 பேர் எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களையும், தலா 6 பேர் பாலக்காடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களையும், தலா 4 பேர் திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களையும், தலா 3 பேர் கோட்டயம் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களையும், தலா 2 பேர் பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களையும், தலா ஒருவர் கொல்லம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 25 பேர் வெளி மாநிலங்களிலிருந்தும், 23 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் 3 பேருக்கு நோய் பரவியுள்ளது. இதில் 2 பேர் திருச்சூர் மாவட்டத்தையும் ஒருவர் மலப்புரம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் மூன்று சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் இன்று நோய் பரவியுள்ளது. இதில் 2 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், ஒருவர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று 56 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இவர்களில் 27 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 7 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 5 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், தலா 3 பேர் திருவனந்தபுரம், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களையும், தலா 2 பேர் கோட்டயம், இடுக்கி மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களையும், தலா ஒருவர் வயநாடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து இதுவரை நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,101 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,340 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது 2,42, 767 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2,40,744 பேர் வீடுகளிலும், 2,023 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 224 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,848 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை 1, 12,962 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் 2,851 பரிசோதனைகளின் முடிவுகள் வர உள்ளன. மேலும் சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 30,785 பேரின் மாதிரிகளை பரிசோதித்ததில் 28,935 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. இதுவரை மொத்தம் 1,49,164 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இன்று புதிதாக நோய் தீவிரம் உள்ள பகுதிகள் பட்டியலில் 6 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு இடம் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கேரளாவில் 122 நோய் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Log in to post comments