Skip to main content

கேரளாவில் இன்று 8 பேருக்கு கொரோனா: இதுவரை குணமடைந் தவர்கள்  211 

TAMIL PRESS RELEASE 14/04/20

சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தகவல்

திருவனந்தபுரம், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: கேரளாவில் இன்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 3 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், ஒருவர் காசர்கோடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் துபாயில் இருந்து வந்தவர்கள் ஆவர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால் மற்ற மூன்று பேருக்கு நோய் பரவியது. இன்று 13 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும் , எர்ணாகுளம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா 2 பேரும் , கொல்லம் , திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவரும் நோயிலிருந்து குணமாகி உள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 173 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 211 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவின் பல்வேறு மாவட்டங்களிலாக 1,07,075 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,6, 511 பேர் வீடுகளிலும் , 564 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 81 பேர் மருத்துவமனையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். நோய் அறிகுறி காணப்பட்ட 16,235 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் 15,488 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

date